சென்னை சந்திப்பில் விளக்கப்பட்ட நமது செயல் திட்டங்களின் படி ஈரோட்டில் நடைபெற்ற சந்திப்பில் கலந்துகொள்ளாத தன்னார்வலர்கள் கோவையில் சந்திப்பு நடைபெற்றது . அதில் பெருவகைகொண்டான் , கோபிநாத் , ஆனந்த் குமார் , ஆகிய மூவரும் கலந்துகொண்டு ஆலோசித்து கோவை பகுதியை திசைக்கு ஒன்றாக பிரித்து நான்கு பகுதிகளாக வரலாற்று தேடல் நடத்த மூடிவு செய்யப்பட்டது.

அதன்படி கடந்த சனவரி மாதம் நடைபெற்ற வரலாற்று தேடல் குறித்த பதிவு இது .

கலந்துகொண்டவர்கள் : பெருவகைகொண்டான், பொன் கார்த்திகேயன் , ஆனந்த குமார் .

துவக்க நேரம் : 9 am முடிவு : 4 . 30 pm

காலை 9 மணிக்கு காந்திபுரத்தில் துவங்கி மாலையில் துவங்கிய இடத்கிலேயே முடித்தோம் .
முக்கிய இடங்கள் :

1.புதுப்பிக்கப்பட்ட தேவராயபுரம் கொங்கு திருப்பதி கோவில் .
2.தேவராயபுரம் ஜல்லிபாளையம் பிரிவில் உள்ள எழுத்து பொறிக்கப்பட்ட கல்தொட்டி .
3.சதிக்கல் இக்கரைபோளுவம்பட்டி
4.முட்டம் நாகலிங்கேஸ்வரர் கோவில்
5.வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் அடிவாரம்
6.சிதிலமடைந்த கோவில் வெள்ளிமலைபட்டினம் .
7.பெருமாள் கோவில் தேவராயபுரம்.

விளக்கம் :

1.கொங்கு திருப்பதி கோவில் எச்சங்கள் :

இக்கோவில் கோவையிலிருந்து தொண்டாமுத்தூர் செல்லும் வழியில் தேவாரயபுரம் எனும் ஊரின் முகப்பில் அமைந்துள்ளது .இப்போது புதுப்பிக்கப்பட்டு விட்டது இருப்பினும் இதன் வெளிப்புறத்தில் முன்பு இருந்த கற்றளியின் பாகங்கள் சிதறுண்டு கிடக்கின்றன .அவை அனைத்தும் கலை அழகு மிக்கதாகவும் , நுணுக்கமானதாகவும் காணப்படுகிறது இவற்றில் யாழி , இலக்குமிக்கு அபிடேகம் செய்யும் யானை போன்றவை கண்களுக்கு விருந்தாக அமைந்தாலும் இவற்றின் நிலை வருத்தத்தை ஏற்படுத்துகிறது

சிதலமடைந்து கிடக்கும் தூண் பாகங்கள் ………

image001

image003

சிதிலக்குவியல்கள்……….

2.தேவராயபுரம் ஜல்லிபாளையம் பிரிவில் உள்ள எழுத்து பொறிக்கப்பட்ட கல்தொட்டி :image005

இக்கல்தொட்டி தேவரயபுரத்திலிருந்து ஜல்லிபாளையம் பிரியும் இடத்தில் அமைந்துள்ளது . இதில் எழுத்துகள் காணப்பட்டாலும் மறைவான இடத்தில இருப்பதால் எழுத்துகளை படிக்க முடியவில்லை.
ஊரின் பொதுவான இடத்தில இருப்பதால் அனைவரும் சென்று காணும்படி உள்ளது மகிழ்ச்சியை தருகிறது

 

 

 

 

3.சதிக்கல் இக்கரைபோளுவம்பட்டி

image007

இச்சதிக்கள் இக்கரை பூளுவம்பட்டி கிராமத்தில் அமைந்துள்ளது . இதன் காலம் 16 நூற்றண்டிற்கு முன்பாக இருக்கலாம் .ஒரு பெண் மதுகுடுவையோடு காணப்படுகிறாள். அவளுக்கு அருகில் அவளது கணவர் வணங்கும் நிலையில் உள்ளார் .

 

 

 

4.முட்டம் நாகலிங்கேஸ்வரர் கோவில்

image009

இக்கோவில் இக்கரை போளுவம்பட்டிக்கு அடுத்ததாக அமைந்துள்ளது . தற்போது இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில்.பேரூர் ஆதீனத்தின் பராமரிப்பில் உள்ளது இதன் அருகில் அகழ்வாய்வுகள் நடந்துள்ளன . அதில் சங்ககால பொருட்கள் கிடைத்துள்ளன .அவையனைத்தும் கோவையில் உள்ள அகழ்வைப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளன
இக்கோவில் புதுப்பிக்க பட்ட போதிலும் புதுப்பிக்க இங்கிருந்த பழைய கற்றளியின் சிலைகள் மற்றும் கற்கள் என அனைத்தும் பயன்படுத்த பட்டுள்ளதால் கல்வெட்டுகள் , மிக சிறிய அளவிலான சுவர் சிற்பங்கள் அதிகமாக காணப்படுகின்றன

முட்டம் நாகலிங்க சுவாமி கோவில்:

மிக சிறிய அளவில் கலை நுணுக்கம் மிக்க சிற்பங்கள்

image013image011

 

5.வெள்ளியங்கிரி ஆண்டவர் கோவில் அடிவாரம்

image015

பழமையான சிற்பங்கள் குறைவு என்ற போதிலும் மலையேறும் இடத்தில இருந்த நவகிரக சன்னதி தூண்களில் உள்ள சிற்பங்கள் அருமையானவை .

 

 

 

 

6.சிதிலமடைந்த கோவில் வெள்ளிமலைபட்டினம்

image017

image019

 

அடுத்ததாக வரும் வழியில் ஒரு குளத்தை ஒட்டிய இடத்தின் மறைவில் ஒரு கோவில் இருந்தது. அக்கோவில் அருகே இருந்தவர்களிடம் விசாரித்தபோது அவர்களின் நினைவு தெரிந்த நாள் முதல் இக்கோவில் (செங்கற்றளி) இவ்வாறுதான் உள்ளது அங்கு யாரும் செல்வதில்லை என்றனர் . முட்புதர்களுக்கு மத்தியில் இருந்த அந்தகோவிலின் வாயிலை தேடினோம் . முழுவதும் கள்ளிசெடியால் சூழப்பட்டிருந்தது. கோவிலை சுற்றி வந்து வழியை கண்டு உள்ளே சென்றோம் . சீட்டுகட்டுகள் , மது பாட்டில்கள் தான் இருந்தன . உள்ளே சிலை இல்லை மேலும் ஒரே ஒரு கருப்பராயன் என அழைக்கப்படும் காவல் தெய்வம் சிலை மட்டும் இருந்தது . இது முருகன் கோவிலாக இருக்கலாம் .

image023

புலிகுத்தி கல்

அடுத்ததாக வெள்ளிமலை பட்டினம் அடுத்து நரசிபுரம் வழியில் உள்ள பெருமாள் கோவிலில் வழிபாட்டில் உள்ள புலிகுத்தி கல்லை கண்டோம் . உள்ளூர் நபர் ஒருவர் எங்களுக்கு உதவினார் .

image021
உள்ளூர் நபருடன் ஆனந்தகுமார் அண்ணா .

7.பெருமாள் கோவில் தேவராயபுரம்.

image025

அடுத்ததாக தேவரயபுரத்தின் மற்றொரு புறத்தில் இருந்த பாதை வழியாக வந்த எங்களுக்கு கீழ்காணும் பெருமாள் கோவில் கிடைத்தது .

 

 

 

 

 

 

 

 

இந்த கோவிலுடன் எங்கள் பயணம் நிறைவுற்றது .

கற்ற பாடங்கள்;

1.ஒவ்வொரு இடத்தை பற்றியும் சரியாக புரிந்துகொண்டு அதாவது முன்பே யாரேனும் குறிப்பெடுதிருந்தல் அதை முழுமையாக தெரிந்து செல்ல வேண்டும் .
2.ஒவ்வொருவரும் தனியே குறிப்பெடுக்க வேண்டும் .
3.வாட்டர் பாட்டில் எடுத்துசெல்ல வேண்டும் .
4.அங்கு உள்ளோருடன் கலந்தாலோசித்து அவை குறித்து கூறப்படும் கதைகளை குறிப்பெடுக்க வேண்டும் . மேலும் இவற்றை பதிவு செய்து வைக்க வேண்டும் .
5.பயணம் துவங்கும் முன் செல்லவிருக்கும் பகுதியின் MAP நகல் எடுத்துவைத்து குறித்துக்கொள்ள வேண்டும்

எழுத்து: கோவை பெருவாகை கொண்டான் விஜயகுமார்

Leave a Reply

%d bloggers like this: