1கோவை மாவட்டவரலாற்று தேடல் மேற்கு #2

கலந்துகொண்டவர்கள் :

பெருவகைகொண்டான், ஆனந்த குமார் , ராஜா , பெனல்டு , கௌதமி  , ஆதித்யவர்ஷினி , தமிழரசி .

துவக்க நேரம்  :    9 am      முடிவு  :  4 . 30 pm

காலை 9 மணிக்கு பேரூர் நொய்யல் ஆற்றங்கரையில்  துவங்கி மாலையில்   பட்டீசுவரர்  கோவில் வாசலில் முடித்தோம்.

முக்கிய இடங்கள் :

1.நொய்யல் ஆற்றங்கரையில் உள்ள பழமையான சிற்பங்கள் .

2.திருநீர் மேடு என அழைக்கப்படும் சாம்பல் மேடு

3.தொண்டாமுத்தூர் புலிகுத்தி கல் .

4.சதிகல்

5.ஆலந்துறை அருகே உள்ள ஈமக்காடு , சதிக்கல் .

 

 

விளக்கம் :

1.நொய்யல் ஆற்றங்கரையில் உள்ள பழமையான சிற்பங்கள் .

ஆற்றங்கரை பழங்காலத்தில் சமவெளி பகுதி மனிதன் ஒரு கூட்டமாக சமூகமாக நாகரிகத்தை கண்டு கற்று வளர்த்து எடுத்த இடமாகவும் , உணவுத்தேவை அதிகரித்த போது பயிர் செய்ய கற்றுக்கொண்ட இடமாகவும் திகழ்ந்தன . ஆனால் பல லட்சம் வருடத்திற்கு பிறகு  கடவுளர்க்கு  ஆலயங்கள் பெரும்பாலும் ஆற்றங்கரையில் அமைக்கப்பட்டன . இவற்றில் ஒற்றுமை என்னவென்றால் அவனது கலாச்சாரம் தோன்றிய இடத்தில் கோவில்கள் வழிபட்டுககவும் , அவனது நாகரிக மேம்பாடுகளை நாம் அறியும் வண்ணம் அக்கோவில் சுவர்களில் செதுக்கி வைத்தான் . எனவே எது எப்படி மாறினாலும் , எதிர்மறையாக தெரிந்தாலும் அவை யாவும் ஒன்றை ஒன்று சார்ந்தவை அல்லது தொடர்புடையவை. பேரூர் நாட்டின் சிறப்புகளுள் நொய்யல் வராலாற்று சிறப்புகள் மிக்கது . அதன் ஆற்றங்கரையில் அமைந்துள்ள இறவா பனை , பேரூர் பட்டீசுவரர் கோவில் தமிழ் கல்வெட்டுகள் நிறைந்த பொக்கிஷம் . எங்களது வரலாற்று தேடல் மேற்கு 2 ஆம் பகுதி துவக்கம் நொய்யல் ஆற்றங்கரையில் உள்ள பழமையான சிலைகளை பார்ப்பதில் இருந்து துவங்கியது .

 

1

 

 

 

1

 

அங்கு உள்ள ஆற்றங்கரை விநாயகர் கோவிலில் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டுள்ள சிலைகள் தான் அவை. அரசன் மற்றும் அரசியர் உடன் அடியார் சிலையும் காணப்படுகிறது . பல்வேறு காலகட்டங்களில் வடிக்கப்பட்ட சப்தமாதர் சிலைகள் காணப்படுகின்றன . இங்கு காணப்படும் விநாயகர் சிலையும் பழமையானதாகும் . ஆற்றங்கரை வழியாக செல்லும் பாதையில் சென்றால் அந்தக்காலத்தில் படடீசுவரரை வழிபட்ட செல்வந்தர் சிலை காணப்படுகிறது . இவை வழிபாட்டில் உள்ளது . மேலும் அனைவரையும் கவர்ந்தவர் ஆற்றங்கரையில் புதிய வரவாக அமைந்துள்ள கிரீடம் அற்ற நாயகன் விநாயகன் தான் . இவை அனைத்தையும் கண்டு அடுத்த இடமான சாம்பல் மேட்டிற்கு நகர்ந்தோம் .

 

2.திருநீர் மேடு என அழைக்கப்படும் சாம்பல் மேடு

தஞ்சை , சேலம் போன்ற இடங்களில் காணப்படுவது போலவே இங்கும் பழமையான கோட்டை இருந்த இடம் காணப்படுகிறது . இங்கு செங்கற்கள் , கருப்பு மற்றும் சிவப்பு ஓடுகள் ,  கூரை ஓடுகள் , விளக்குகள் போன்ற மண்ணால் ஆனா பொருட்கள் கிடைக்கின்றன . இங்குள்ள செங்கற்கள் அளவில் பெரியவையகவும் , கூரை ஓடுகள் நேர்த்தியாகவும் சரியான இணைப்பு நுணுக்கங்கள் உடனும்காணப்படுகின்றன. விளக்குகள் பல வடிவங்களில் உடைந்த நிலையில் கிடைக்கின்றன . இவை நம் முன்மக்களின் நாகரிகம் மற்றும் திறமையையும் , கலை நுணுக்கத்தையும் தெரிவிக்கின்றன .

 

3.தொண்டாமுத்தூர் புலிகுத்தி கல்

தொண்டாமுத்தூர் பேருந்து நிறுத்தத்தின் அருகில் அமைந்துள்ள கோவிலின் உட்பகுதியில் அமைந்துள்ளது . முற்காலத்தில் மனித நாகரிகம் வளர்ந்த பிறகு விவசாயம் மலைப்பகுதிகளுக்கு அடுத்துள்ள ஆற்றங்கரையில்  செய்யப்பட்டது. மேலும் கோவை மண்டல பகுதிகளை பொறுத்தவரை மேய்ச்சல் தொழில் பிரதானமாக இருந்ததால் மனிதன் விலங்குகளை பழக்கபடுத்தி வளர்க்க துவங்கினான் . அனைவரும் அவ்வாறு விவசாயம் மற்றும் மேய்ச்சல்  செய்யும் பொழுது அவர்கள் அங்கேயே தங்க நேரிட்டது. அங்கு குடில்கள் அமைத்து மனிதர்கள் தங்கினர் இது ஊர் எனப்பட்டது.  இவ்விடம் ஆறு மற்றும் காட்டின் அருகில் அமைந்திருந்ததால் வறட்சி காலங்களில் வன விலங்குகள் நீருக்காகவும் , உணவிற்காகவும்  சமவெளி பகுதிகளில் , ஆர்ற்றங்கரைகளில் வரும் பொழுது மனித மிருகத்திற்கும் , வன விலங்குகளுக்கும் ஏற்ப்பட்ட மோதல்களில் மாடுகள் ,ஆடுகள் `என பெரும் இழப்புகளை மனிதர்கள் சந்திக்க நேர்ந்தது , மேலும் காட்டாறுகள் திசைமாற்றத்தால் ஏற்ப்படும் அழிவு  மற்றும் மறுகரையில் உள்ள ஊரில் உள்ளவர்களால் உணவு , உடைமை திருட்டு  போன்றவை அதிகரித்ததல் ஊரில் வலிமை மிக்க ஆடவர்  காவலர்களாக நியமிக்க பட்டனர் .இவ்வாறு புலியை குத்தி கொன்றதன் நினைவாக அல்லது புலியை குத்தினாலும் நடந்த சண்டையில் இறந்தலும் அவர்களது நினைவாக அவரது வீரத்தை பாராட்டி வைக்கப்படும் நினைவுகள் புலிகுத்திகல் அல்லது   புலிகுத்திபட்டான் கல் எனவும் அழைக்கப்படுகிறது . இப்பழக்கம் சில நூற்றாண்டுகளுக்கு முன்  ஏற்ப்பட்டது .பிற்காலத்தில் இப்பழக்கம் பல ஆண்டுகள் பின்பற்றப்பட்டது .பெரும்பாலும் மேற்க்குதொடர்ச்சி மலை பகுதியில் வேங்கை எனப்படும் சிறுத்தைகள் அதிகமாக காணப்படுகின்றன. இங்குள்ள நடுகல்லில் ஒரு வேங்கையை வீரன் ஓருவன் குத்துவதும் , அவனுடன்  அவனது மனைவியும் கானப்படுகின்றனர் .இந்தக்கோவில் உள்ளூர் சாதிசண்டையால் வெளியாட்கள் உட்புக அனுமதி இல்லாததால் வெளிப்புறதிளிருந்தே புகைப்படம் எடுத்து வந்தோம்

 

 

.

 

 

 

4.சதிக்கல் :

தொண்டமுத்தூரில் இருந்து வடக்குப்புறம் செல்லும் சாலையில் சிறிது தூரம் சென்றால் மின்சார வாரிய அலுவலகத்திற்கு அருகே ஒரு காவல் தெய்வத்தின் கோவில் உள்ளது அங்கு இவ்விநாயகர் உள்ளார் . இச்சிலை பேரூர் ஆற்றங்கரையில் உள்ள சிலையுடன் ஒத்துபோகிறது .

இங்கு ஒரு சத்திக்கல் காணப்படுகிறது . இதில் ஒரு ஆண் உருவம் மதுக்குடுவையுடனும் சூரிய சந்திர உருவம் பொரிக்கப்பட்டதாக உள்ளது .

 

5.ஆலந்துறை அருகே உள்ள ஈமக்காடு , சதிக்கல்

அடுத்ததாக ஆலந்துறை அருகே உள்ள ஈமக்காட்டைகண்டோம் . அங்கு சில கல் பதுக்கைகள் மற்றும் மற்றும் சதிக்கல்லும் கிடைத்தது . சதிக்கல் எனப்படுவது கணவன் இறந்த பிறகு அவன் உடலை இடும் சிதையில் விழுந்து தன்உயிரையும் துறந்த பெண்ணின் நினைவாக வைக்கப்படும் நினைவுகல் ஆகும் . முற்காலங்களில் பெண்கள் தன கணவன் மீது இருந்த அன்பின் காரணமாக தாங்களாகவே தங்களது உயிரை மாய்த்துக்கொண்டனர் ஆனால் பிற்காலத்தில் அது சடங்காக மாறியதன் விளைவாக வற்புறுத்தப்பட்டு மதுகுடிக்கவைத்து தீயிலிட்டு கொல்லப்பட்டனர் . அவ்வாறான ஒரு நடுகல் ஆலந்துறை அருகே காணப்படுகின்றது. இதில் ஒரு ஆண் வணங்கும் நிலையிலும் அருகில் பெண் மதுக்குடுவையுடனும் காணப்படுகின்றனர்.

 

 

இத்துடன் எங்களது இரண்டாம் தேடலை முடித்துக்கொண்டு பேரூர் கோவில் தேர் அருகில் வந்து அடுத்த தேடல் குறித்த கலந்துரையாடலுக்கு பிறகு அவரவர் ஊருக்கு பயணப்பட்டோம்.

 

கற்ற பாடங்கள் :

1அதிக வெயில்காலம் என்பதால் அடுத்த தேடலில் ஏதேனும் குளிர்பானம் அல்லது நீர் குப்பி,கைக்குட்டை  எடுத்து செல்ல வேண்டும் .

  1. அடுத்த தேடலை வெயில் நேரங்களில் பயணத்தை தவிர்த்து சரியான திட்டமிடல் மேற்கொண்டு வெயிலில் இருந்து தப்பிக்க வேண்டும் என முடிவு செய்தோம்.

 

 

மேற்கண்ட தொகுப்பு ஒரு வரலாற்று தேடலில் துவக்க நிலையில் உள்ள தன்னார்வலனின் பதிவாகும் . அறிஞர் பெருமக்கள் ஏதேனும் குற்றம் , குறை காண்கின் அறிவுரைத்து வழிநடத்துமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

இவண் ,

பெருவகைகொண்டான்

Leave a Reply

%d bloggers like this: