தினத்தந்தி செய்தி
தினத்தந்தி செய்தி

நவம்பர் மாதம் 20ம் தேதி ஞாயிறு அன்று நமது குழு திருச்சிராப்பள்ளி மாவட்டம் லால்குடி சப்தரிசிசுவரர் சிவாலயத்தில் மேற்கொண்ட மரபுநடையைப் பற்றி தினத்தந்தியில் வெளிவந்த செய்தித்தொகுப்பு கீழே..

இந்திய தொல்லியல் துறை சார்பில் உலக மரபு வாரமாக நவம்பர் 19ந் தேதி முதல் ஒரு வார காலம் கொண்டாடப்படுகிறது, தமிழக மரபுகள் காக்க 50 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி மரபுவழி நடைபயண குழுவினர் லால்குடி சப்தரிஷிஸ்வரர் கோயிலில் ஆய்வு மேற்கொண்டனர். இதில் முன்னாள் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் ராஜசேகரன் பாண்டுரங்கன், ஸ்தபகி ராமன், குடவறை கோவில்கள் ஆராய்ச்சியாளர் லெட்சுமி, சங்க கால நாணயங்கள் சேகரிப்பு நிபுணர் பெரியசாமி ஆறுமுகம் உள்ளிட்ட குழுவினர் கோவிலின் அமைப்பு, கல்வெட்டுகள், சிற்பங்கள் தனி சிறப்பு வாய்ந்த கட்வாங்கம் எனும் ஆயுதம் ஏந்திய மகாகாளசிற்பம், நீண்ட தூரம் ஒலி கேட்கும் உடல் வாத்தியம் உள்ளிட்ட பல்வேறு சிறப்பு அம்சங்கள் மற்றும் இக்கோவிலில் உள்ள 140 கல்வெட்டுகள் குறித்து தங்கள் கைவசம் உள்ள பதிவுகளை சரிபார்த்தனர். இதில் பங்கேற்ற லால்குடி பகுதியைச் சேர்ந்த பள்ளி, கல்லூரி மாணவ மாணவிகளுக்கு இத்தகவல்கள் குறித்து எடுத்து கூறினர். மேலும் இந்த ஆய்வின் போது கோவில் வளாகத்தில் பண்டைய கால நாணயங்கள் குறித்த கண்காட்சியும் நடைபெற்றது.

கட்வங்க ஆயுதத்துடன் உள்ள மகாகாளர் சிலை
கட்வங்க ஆயுதத்துடன் உள்ள மகாகாளர் சிலை
உடல் வாத்தியக் கருவி
உடல் வாத்தியக் கருவி

Leave a Reply

%d bloggers like this: